சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர் சேலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்காக தனது காரில் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி முனியப்பன் கோவில் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.