470 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அவரது ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீரப்பு வழங்கியது. இதனையடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொணடாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.