தலைவாசல் அருகே விவசாய சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கூட்ரோடு பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா உள்ளது. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை ஆயிரம் கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கால்நடை மருத்துவக் கல்லூரி பயன்பாட்டில் உள்ள நிலையில் கால் நடை ஆராய்ச்சி பண்ணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்நிலையில் இவ்வளாகத்திற்கு என சேலத்தில் இருந்து தனிக்குழாய் மூலம் மேட்டூர் குடிநீர் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை உளுந்தூர்பேட்டையில் அமையுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதை கண்டித்து நதிகள் இணைப்பு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் கலந்து கொண்டு கண்ட உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக ஆராய்ச்சி நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உளுந்தூர்பேட்டை சிப்காட்டிற்குகால்நடை பூங்காவிற்கு என தனிக்குழாய் மூலம் அமைக்கப்பட்ட தண்ணீரைகொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி