தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு வருகின்ற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில் மாநில மாநாட்டிற்கான பல்வேறு திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இந்நிலையில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு குழுக்கள் மற்றும் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் 30 குழுக்காக அமைக்கப்பட்டு அந்த பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பங்கு பெற்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வருகின்ற மாநில மாநாடு இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் விட மிகச் சிறப்பாக அமைவது குறித்தும், கொள்கை மற்றும் கருத்துகளை அணுகுமுறை குறித்தும் சமூக பொறுப்புணர்வு கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டை சிறப்பாக வழி நடத்துவது குறித்தும், வெற்றிக் கொள்கை திருவிழாவாக அமைவது குறித்தும், அரசியல் கருத்தரங்கம் குறித்தும் மாநில மாநாடு பாதுகாப்பாக நடைபெறுவது குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.