ஆத்தூர் நகரமன்ற கூட்டம் காங்கிரஸ் கவுன்சிலர் வெளிநடப்பு.

76பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம்
நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடைபெற்றகூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக நகர மன்ற உறுப்பினர் உமா சங்கரி தனது வார்டு பகுதியில் சரிவர குப்பைகளை அல்லாமல் சாக்கடையில் புழுக்கள் அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்தார்.
மேலும் நகர மன்ற கூட்டம் காலை 11: 30 மணியளவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்து 12 மணி அளவில் கூட்டம் நடைபெறுவதாகவும் நகர மன்றமன்ற கூட்ட அரங்கில் நகரமன்ற உறுப்பினர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நேரத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் நகர மன்ற தலைவரிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் கவுன்சிலர் தேவேந்திரன்
ஆத்தூர் நகராட்சி புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளதாகவும் புதிதாக கட்டப்பட்டு வரும் 60 கடைகளுக்கு தலா 10 லட்சம் ஏலம் விடுவதற்கு முன்னரே வசூல் செய்யப்படுவதாகவும் புகார் கூறினார். மேலும் ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளது, இது யார் அனுமதி கொடுத்தது, இது போன்று ௯ம்பு வடிவ ஒலிபெருக்கி வைத்து உள்ளதாகவும், இதை கண்டிக்கத்தக்கதாகவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் கேள்விக்கான உரிய பதில் அளிக்காததை கண்டித்து காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
பேட்டி: தேவேந்திரன் (காங்கிரஸ் கவுன்சிலர்)

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி