சேலம் மாவட்ட ஆத்தூர் அதிமுக நகர செயலாளர் மோகன், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் 10 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கண்தானம் செய்தனர். பின்னர், அதற்கான சான்றிதழ்களை மருத்துவர் கிருபா சங்கரிடம் பெற்றனர்.