தீயில் கருகிய பசுமாடு

52பார்த்தது
ஆத்தூர் அருகே மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் பசு மாடு ஒன்று தீயில் கருகியது.

சேலம் மாவட்டம் , ஆத்தூர் அருகே உள்ள உப்பு ஓடை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது வீட்டின் அருகில் கொட்டகை அமைத்து மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மாட்டு கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து சேகர் மாடுகளை காப்பாற்ற அவிழ்த்து விட்டு உள்ளார். இரண்டு மாடுகள் உயிர்த்தப்பிய நிலையில் ஒரு பசுமாடு தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி