வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பேர் கைது

79பார்த்தது
வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பேர் கைது
பெரம்பலூர் நகர போலீஸ் நிலைய எல்லையில் ராகுல் என் கிற வெங்கடேசன் (வயது 25) என்பவரை மர்ம நபர்கள் அரி வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மோட்டார் சைக்கிளை விரட்டி வந்தனர். தலைவாசல் நோக்கி மோட்டார் சைக்கிள் வந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் தலை வாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று தலைவாசல் போலீசார் மும்முடி பகுதி யில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை பெரம்பலூர், தலைவாசல் போலீ சார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் திருவள்ளூர் சங்குப்பேட்டையை சேர்ந்த சிவா என்கிற மார்க்கெட் சிவா (20), பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த தாஸ் என்கிற தசரதன் (19) பெரம்பலூர் தம்பி ராய்பட்டி பகுதியை சேர்ந்த அஜித்(20) ஆகியோர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார்
கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி