புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்

72பார்த்தது
புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்
புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக ஏ.எப்.டி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தற்காலிகமாக ஏ.எப்.டி மைதானத்துக்கு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள எ.எப்.டி மைதானத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி