ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த யானை பவானி கடந்த 2012ல் ஆற்றில் சிக்கி உயிரிழந்தது. பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த யானைக்கு மணி மண்டபம் அமைக்க இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்த பணி பல ஆண்டுகளாக தொடங்காமல் இருந்த நிலையில் பக்தர்களின் வலியுறுத்தல் காரணமாக தற்போது தொடங்கியுள்ளது. ரூ. 43 லட்சத்தில் அமையும் மணி மண்டபத்திற்குள் பவானியின் சிலை வைக்கப்படும்.