பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது. அதேபோல், பொங்கலுக்கு முன்னாடியே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால்,பொங்கலுக்கு 4 நாட்களுக்கு முன் ஜனவரி 10ஆம் தேதியே பொங்கல் பணம் ரூ.1000, மகளிர் உரிமை தொகை ரூ.1000 என மொத்தம் ரூ.2000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள் உள்ளனர்.