நேற்று (ஜன. 12) மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை மாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரை ரோஹித்தே இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும், அதன் பிறகு பும்ராவை கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.