பாபர் மசூதி குறிப்புகள் நீக்கம்- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டனம்

67பார்த்தது
பாபர் மசூதி குறிப்புகள் நீக்கம்- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டனம்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி குறித்த குறிப்புகளை நீக்கியிருப்பதிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும். இப்படி நீக்குவதன் மூலமாக வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருதுகிறது. நரேந்திர மோடி அரசு வரலாற்றிலிருந்து பாபர் மசூதியை நீக்கும் திரிபுவாதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி