பழனி கிரிவீதியில் பழனி ஆதீனம் தவத்திரு சாது சுவாமிகள் திருமடம் உள்ளது. இவற்றை பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் நிர்வகித்து வருகிறார். நவராத்திரி விழாவை முன்னிட்டு, சாது சுவாமிகள் திருமடத்தில் வரும் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு இலவச சமயப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படவுள்ளன. பங்கேற்க விரும்புவோர் 04545-242440, 9443715169, 94880 08003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 3 வேளை உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.