ரூ.6 ஆயிரம் நிவாரணம்.. இன்றுமுதல் தொடக்கம்

74பார்த்தது
ரூ.6 ஆயிரம் நிவாரணம்.. இன்றுமுதல் தொடக்கம்
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக 4 மாவட்டங்களில் டோக்கன் விநியோகம் நடைபெற்றது. இந்நிலையில் டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்றே நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து பொங்கல் பரிசு குடுக்கும் பணிகள் இருப்பதால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி