டெல்லி ராஜ்புராவில் கடந்த 15ஆம் தேதி துவாரகாவில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்தவர் நீது (30). இவருக்கு, ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் நட்சத்திரமாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கு, டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்க நினைத்துள்ளார். அதற்குப் பணம் இல்லாததால், தான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.