ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இந்நிலையில் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆற்றலை சேமிக்கவும் நாடு முழுவதும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 5 மணி வரை பொது வெளியில் நடமாட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.