தனுஷூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

921பார்த்தது
தனுஷூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘D51’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்தி