ராமோஜி ராவ் மறைவு - இரங்கல் தெரிவித்த மோடி

69பார்த்தது
ராமோஜி ராவ் மறைவு - இரங்கல் தெரிவித்த மோடி
ராமோஜி ராவ் மறைவுக்கு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ராமோஜி ராவ் மறைவு தெலுங்கு மக்களுக்கு பெரும் இழப்பு. ராமோஜி ராவிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். பத்திரிகைத் துறையிலும் சினிமா துறையிலும் அழியாத முத்திரையைப் பதித்தவர்.
ராமோஜி ஊடகங்களில் புதிய தரங்களை அமைத்தார். அவர் எப்போதும் நாட்டின் வளர்ச்சிக்காகவே சிந்தித்தவர். ராமோஜி ராவுடன் பலமுறை பேசும் வாய்ப்பு கிடைத்தது. ராமோஜி ராவ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி