வலிப்பு வந்தது போல் நடித்து வழிப்பறி.. 2 பேர் கைது

10464பார்த்தது
வலிப்பு வந்தது போல் நடித்து வழிப்பறி.. 2 பேர் கைது
திருச்சி காட்டுப்புத்தூரைச் சேர்ந்த பொன்னர் (31) என்பவர் நேற்று (ஜூன் 7) முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூருக்கு பைக்கில் சென்றார். அப்போது சாலையில் ஒருவர் வலிப்பு வந்து கிடந்துள்ளார். அருகே இருந்தவர் உதவியை கேட்டு கூச்சலிட்டார். இதனை பார்த்த பொன்னர் அவர்களுக்கு உதவி செய்ய சென்றார். அப்போது திடீரென இருவரும் சேர்ந்து பொன்னரை தாக்கி, ரூ.5 ஆயிரம், செல்போன் மற்றும் பைக்கை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட நவீன் (25), மாரி (25) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி