முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜுன் 08) மாலை 6:30 மணிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் தி.மு.க., தலைவராக டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக பழனிமாணிக்கம், கொறடாவாக ஆ.ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் பதவிக்கு கனிமொழி போட்டியிட விரும்பினார். ஆனால், மூத்த எம்.பி., டி.ஆர்.பாலுவுக்கு அப்பொறுப்பு தரப்பட்டது.