தனுஷ்கோடியில் 4-ஆவது நாளாக கடல் சீற்றம்.!

64பார்த்தது
தனுஷ்கோடி, அரிச்சல்முனைப் பகுதியில் நான்காவது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், தனுஷ்கோடி, அரிச்சல்முனைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் தொடா்ந்து எச்சரித்தனா். இதை மீறிக் கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி