ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டத்தில் நேற்று 2 வது நாளாக 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாமில்' மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆர். எஸ். மங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கி வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் குறித்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டிருந்தவர், கர்ப்பிணிப் பெண்களின் வருகை குறித்தும் ஆர்எஸ். மங்கலம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்தும் கேட்டறிந்தார்.