எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்க உரிமம் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உரிமம் பெற்ற பிறகு, விண்ணப்பித்த 15-20 நாட்களுக்குள் ஸ்டார்லிங்கிற்கு சோதனை அலைக்கற்றை வழங்கப்படும். ஸ்டார்லிங்க் விரைவில் இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் வழி இணையதள சேவை வழங்க மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸுடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.