15,000 லிட்டர் டீசல் திருட்டு.. 6 போக்குவரத்து ஊழியர்கள் சஸ்பெண்ட்

52பார்த்தது
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில், அரசுப் பேருந்துகளுக்கு தினசரி டீசல் நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 15,000 லிட்டர் டீசல் குறித்த தகவல், தணிக்கை கணக்கில் வராததால் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி