மூதாட்டியை இடித்து தூக்கிய கார்.. சம்பவ இடத்திலேயே பலி

65பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோவில் பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி சசிகலா (75), அன்னூர் - கோவை சாலையில் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று அவரை இடித்து தூக்கி எரிந்துவிட்டு நிற்காமல் சென்றது. இந்த கோர விபத்தில், மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து, விபத்தை ஏற்படுத்திய திரையரங்க மேலாளர் சுதர்சன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி