பேருந்து நிறுத்தம் அருகே கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள்.!

71பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வாரந்தோறும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வியாபாரிகள் வருகை தருவா். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து காய்கனிகள், வீட்டுப்பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

வாரச்சந்தைக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து நிறுத்தத்தின் முன்பாக இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளை மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூராக இருந்து வருகிறது. எனவே உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி