நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பாமகவினா் முற்றுகை.!

81பார்த்தது
நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பாமகவினா் முற்றுகை.!
திருவாடானை பொதுப்பணித் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.


திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் கண்மாய், குளங்களில் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பொதுப்பணித் துறை அலுவலகத்தை பாமகவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருவாடானை அருகே வெள்ளையபுரம் கிராமத்திலுள்ள கண்மாய், குளங்களை சிலா் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாமகவினா் திருவாடானை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா், வட்டாட்சியா் காா்த்திகேயன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, வருகிற 27-ஆம் தேதிக்குள்ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you