திருவாடானை பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்.!

64பார்த்தது
2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாள் இன்று அதிகாலை முதல் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொண்டி பேரூராட்சி பகுதிகளிலும் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மக்களிடம் பேசிய அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் விடியா திமுக அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட மக்களாகிய நீங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டிக் காத்த புரட்சித்தமிழர் எடப்பாடியார் மீட்ட சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை செலுத்தி தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்து இப் பகுதி மக்களின் குறைகளை தீர்க்க மக்களின் குரலாக எனது குரல் டெல்லியில் முழங்கும் என தெரிவித்தார் இந்த நிகழ்வில் அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கே சி ஆணிமுத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ்டிபிஐ ஃபார்வேர்ட் பிளாக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி