ராமேசுவரம் கடல் பகுதியில் சாகா் கவாஜ் கடல் வழி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்திய கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத் துறை, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய, மாநில உளவுத் துறையினா் ஒருங்கிணைந்து ஆண்டு தோறும் சாகா் கவாஜ் என்னும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில் ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றறது. இதில், இந்திய கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத் துறையினா் இரண்டு படகுகளில் சென்று ஓலைக்குடா துறைமுக பகுதியில் ஊடுறுவ முயன்ற போது, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஆய்வாளா் கனகராஜ், உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையிலான போலீஸாா் இரண்டு படகுகளையும் மடக்கி பிடித்து 16 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 போலி குண்டுகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.