சித்திரை திருவிழா: ராட்டினங்கள் இயக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

2609பார்த்தது
சித்திரை திருவிழா: ராட்டினங்கள் இயக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமியை வழிபட்ட பின்னர் ஆற்றுக்குள் அமைக்கப்படும் ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகளுக்கு சென்று விழாவை கொண்டாடுவர்.

இந்த ஆண்டு திருவிழாவிற்காக ராட்டினங்கள், மற்றும் பொழுது போக்கும் அம்சங்கள் தயார் நிலையில் உள்ளது. விழா துவங்கிய நிலையில் ராட்டினங்களை இயக்க அரசு துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ராட்டினங்கள் இயக்கப்படாமலும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் வண்ண, வண்ண மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள், சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி