ஏற்றுமதிக்கு வைத்திருந்த வைக்கோல் தீயில் எரிந்து நாசம்.!

57பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் வளநாடு செங்கற்படையை பெரியசாமி கேரளா மாநிலத்திற்கு மாட்டு தீவனம் அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், சத்திரக்குடி அருகே பெரியசாமியின் நிலத்தில் கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்புகளை மாலை நேரத்தில் அப்பகுயை சேர்ந்த சிறுவர்கள் தேனி எடுப்பதற்காக தீ வைத்த பொழுது வைக்கோல் படப்புகளில் தீ பற்றி மலமலவென எரிந்தது.

இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை மீட்பு வீரர்கள் எட்டு மணி நேரமாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வைக்கோல் படப்புகளை அப்புறப்படுத்தி தீயை அணைத்து வரும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி