பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கு தள்ளிவைப்பு.!

6442பார்த்தது
பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கின் விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை ஜன. 11 ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இவ்வழக்கில் பரமக்குடி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜமுகமது மற்றும் உமா, கயல்விழி ஆகியோரை கைதுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு சி. பி. சி. ஐ. டி. , மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. இவ்வழக்கில் தொடர்புடைய உமா மற்றும் கயல்விழிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை ஜன. 11 ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி