பரமக்குடி அருகே சனி பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை.

1924பார்த்தது
பரமக்குடி அருகே சனி பெயர்ச்சி விழா சிறப்பு பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்
மேலப்பெருங்கரை கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு அங்கையர் கன்னி அம்பாள் சமேத ஸ்ரீ அட்டாள சொக்கநாத சுவாமி திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெற்றது
இறைவனின்47 வது திருவிளையாடல் நடைபெற்ற
இக் கோயிலில் மூலவர் சுவாமி சுயம்புலிங்கம் ஆகவும் தனி சன்னதியில் மீனாட்சியும் அருள் பாலிக்கின்றனர்
இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இக்கோயிலில்
யாகசாலை அமைத்து விசேஷ யாகங்களும் பிராய சித்த யாகங்களும் செய்து பூர்ணாஹூதி நிறைவு பெற்று யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பாடு ஆகி மூலவர் சுவாமிகளுக்கும் சனீஸ்வரர் பகவானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது
இங்கு நடைபெற்ற சனிப்பெயர்ச்சி பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி