பரமக்குடியில்
காலபைரவருக்கு சம்பக சஷ்டி விழா ஐந்தாம் நாள் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு 21வது ஆண்டாக நடைபெற்று வரும் சம்பக சஷ்டி விழா ஐந்தாம் நாளில் நடைபெற்ற பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பைரவரை தரிசனம் செய்தனர்
நாள் முழுவதும் நடைபெற்ற விழாவில் கோயில் மகா மண்டபத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது பூர்ணகஹுதி நிறைவடைந்து யாகசாலையில் இருந்து திருக்குடம் புறப்பாடு நடைபெற்றது
தனி சன்னதியில் அருள் பாலிக்கும் பைரவருக்கு
பஞ்சகவியம், மா பொடி, திரவிய பொடி, சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
மாலையில் பைரவருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்
நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று பைரவரை தரிசனம் செய்தனர்.