எஸ். காவனூா் கிராமத்தில் புதிய மின்மாற்றி திறப்பு.!

80பார்த்தது
எஸ். காவனூா் கிராமத்தில் புதிய மின்மாற்றி திறப்பு.!
பரமக்குடி ஒன்றியம் எஸ். காவனூா் கிராமத்தில் புதிய மின்மாற்றி திறந்து வைக்கப்பட்டது.

இந்த கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின்சார, மின்னணு பொருள்கள் அடிக்கடி பழுதாகின. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்து வந்த புகாரைத் தொடா்ந்து இந்தப் பகுதியில் ரூ 10. 70 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்குப் பணி நடைபெற்று நிறைவடைந்தது. இதை சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேன் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், மின்வாரிய செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி மின்பொறியாளா் சொ. செல்லத்துரை, பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி