கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி பரமக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டி மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ
வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமை உரையாற்றினார். முன்னதாக வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சந்திரன் வரவேற்றார். பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ரிலையன்ஸ் வங்கி மற்றும் நிதி, ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஜவுளி, சேவை நிறுவனங்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 93 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 1780க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 356 பேருக்கு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அடுத்த சுற்று தேர்வுக்கு 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் அரசுப் பணிக்குச் சென்ற 7 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன..