ஆபாசமாக பேசிய விலங்கியல் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

82பார்த்தது
பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ந்தேதி பன்னிரண்டாம் வகுப்பு விலங்கியல் பாட ஆசிரியர் வெங்கடேசன் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் உணர்வை தூண்டும் விதமாக விளக்கம் அளித்து பாடம் நடத்துவதாக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று(அக்.1) இரவு பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி