மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி திருவிழா

79பார்த்தது
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற முளைப்பாரி திருவிழா: 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைபாரியை தலையில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 201 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் தொடங்கி தினமும் இரவு பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கும்மியாட்டம் ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் என சிறப்பாக நடைபெற்றது.

இறுதி நாளான இன்று வானவேடிக்கைகள் முழங்க பெண்கள் கும்மி அடித்தும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் அதன் பின்பு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக தலையில் சுமந்து வீதி உலா வந்து முளைப்பாரியை கண்மாயில் கரைத்து அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

விழாவை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூடியிருந்து விழாவை கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி