*58 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கொண்ட இரண்டு கட்டிடங்கள் திறப்பு*.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியத்திற்குட்பட்டஅ. காச்சான், உகமை கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குழந்தை நேயப்பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 58 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட இரண்டு புதிய கட்டிடங்களை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்து மாணவ மாணவியகள் பயன்படுத்தி கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் நயினார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு மற்றும் முரளிதரன் உதவி கல்வி அலுவலர் பாஸ்கரன் உகமை தலைமை ஆசிரியை அ. கட்சான் ஆசிரியை அம்பிகா ஒன்றிய கவுன்சிலர் இளவரசி மணிவண்ணன் நயினார் கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், பொட்கவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஹக்கீம், நயினார் கோவில் இளைஞர் அணி ராஜேஷ் கிளைச் செயலாளர் வாசு முன்னாள் கிளை செயலாளர் போஸ் அக்கிரமேசி கிளைச் செயலாளர் முருகேசன், உகமை கிளை செயலாளர் சிவானந்தம், ஒப்பந்தக்காரர்கள் மணிமண்ணன் மற்றும் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.