ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய நகரமாக பரமக்குடி விளங்கி வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்நகர் பகுதியில் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போக்குவரத்து போலீசார் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு லாக் போட்டு அபராதம் விதித்தனர் மேலும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சரக்கு வாகனங்கள் கார்கள் போன்றவற்றுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செயல்பட வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.