மூன்றாம் முறை பதவியேற்பு: பரமக்குடியில் கொண்டாடிய பாஜகவினர்!

82பார்த்தது
பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி கொண்டாடி மகிழ்ந்த பாஜகவினர்.

இந்தியாவிற்கு இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வர உள்ளார் என பாஜகவினர் தெரிவித்தனர்.


டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை முன்பு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பொட்டி தட்டி கிராமத்தில் போகலூர் ஒன்றிய பொருளாளர் அண்ணாமலை ஏற்பாட்டில், பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களையும் எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :