பரமக்குடி அருகே பெண்ணிடம் தங்க நகை திருட்டு

349பார்த்தது
பரமக்குடி அருகே பெண்ணிடம் தங்க நகை திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மனைவி ராமாயி (60). இவர் சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து எமனேசுவரம் பஜாரில் விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை பரமக்குடி பெரியகடை பஜாரில் வாங்கி உள்ளார்.

பின்பு ஊருக்கு செல்வதற்காக ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி ஊருக்கு சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி அதே பஸ்சில் ராமாயின் பின்பக்க சீட்டில் அமர்ந்து வந்துள்ளான். பின்னர் திடீரென ராமாயி கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் தங்க தாலி சங்கிலி காணாமல்போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு திரும்பி பார்த்தபோது அந்த மர்ம ஆசாமியை காணவில்லை. இதுகுறித்து ராமாயி எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி