நயினாா்கோவில் அருகே வயல்வெளிப் பள்ளி பயிற்சி.!

75பார்த்தது
நயினாா்கோவில் அருகே வயல்வெளிப் பள்ளி பயிற்சி.!
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள அ. காச்சான் கிராமத்தில் உழவா் வயல்வெளிப் பள்ளி பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துறை சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் பி. ஜி. நாகராஜன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜன், நம்மாழ்வாா் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விதைப்பு முதல் அறுவடை வரை நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், விவசாயிகளுக்கு 6 வாரங்கள் முறைசாராக் கல்வி பயிற்சி வகுப்புகள், வயல்வெளிப் பள்ளிகள் நடத்துவது குறித்தும், நஞ்சில்லா விவசாயத்துக்கான தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சியளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நெல் ரகங்கள், விதை நோ்த்தி தொழில்நுட்பங்கள், உழவியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

மண் மாதிரி சேகரிப்பு, வரிசை விதைப்பு, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்தும், நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் காணும் வயல் சூழல் ஆய்வு நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி