கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா போட்டிகள்.!

55பார்த்தது
கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா போட்டிகள்.!
பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரவைசிய சபைத் தலைவா் ராசி என். போஸ் தலைமை வகித்தாா். இணைத் தலைவா் எஸ். பாலுச்சாமி, செயலா் வி. எஸ். என். செல்வராஜ், எஸ். கே. பி. லெனின்குமாா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.


கல்லூரியின் இணைச் செயலா்கள் வி. சீனிவாசன், ஏ. பி. எம். இளையராஜா, பொருளாளா் எஸ். தட்சிணாமூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, கோலம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கல்லூரிச் செயலா் சோலைமலை டாக்டா் எஸ். வரதராஜன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் டி. அல்போன்சா நன்றி கூறினாா்.

டேக்ஸ் :