அரசுபேருந்துமோதிய விபத்தில் மூதாட்டிமற்றும் 5மாத குழந்தைபலி

69பார்த்தது
பரமக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி மற்றும் ஐந்து மாத கைக்குழந்தை பலி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் உள்ள புழுதிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் முருகன் இவரது மனைவி சத்யா அவரது தாயார் செல்வி தனது ஐந்து மாத குழந்தை ருத்ரன் ஆகியோருடன் பரமக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் ஐந்து மாத குழந்தையின் மீது பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட சத்யாவின் தாய் செல்வி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் மூதாட்டி மற்றும் ஐந்து மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி