தொண்டி பகுதியில் மீன்கள் வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை குறைந்தது. தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்ட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம். ஆா். பட்டினம், பாசிபட்டினம், எஸ். பி. பட்டினம் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காளையாா்கோவில், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்வா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில், மீன் வரத்துக் குறைந்து, விலை அதிகரித்துக் காணப்பட்டது.
கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி காணப்படுகிறது. நண்டு, இறால், கணவாய் மீன்கள் வரத்து அதிகரித்து இருப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா். நண்டு கிலோ ரூ. 250-க்கும் விலை மீன் ரூ. 250-க்கும், இறால் ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.