ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி வட்டம் பகைவென்றி கிராமத்தை சார்ந்த முருகேசன் பட்டா மாறுதல் சம்மந்தமாக அவர்கள் சிறகிகோட்டை VAO ஈஸ்வரமூர்த்தியிடம் 10 நாட்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அது சம்மந்தமாக விசாரிக்க பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
வட்டாட்சியர் அவருடைய தொலைபேசியின் வாயிலாக கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டபோது அவர் வட்டாட்சியரிடம் தொலைபேசியை முருகேசன் இடம் கொடுக்க சொல்லி அவரை ஒருமையில் கெட்டவார்த்தைகளால் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை விஏஓ மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வைத்துள்ளனர்.