ஆடி இரண்டாம் வெள்ளி: அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி.!

54பார்த்தது
ஆடி வெள்ளியை முன்னிட்டு நயினார்கோவில் நாகநாதர்சுவாமி ஆலயத்திற்கு அதிகாலையில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று கொடி மரத்தின் கீழ் விளக்கு ஏற்றி அம்மனை தரிசித்து வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் நாகநாதர்சுவாமி ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிரசித்திப்பெற்ற நயினார்கோவில் சௌந்தரநாயகி அம்மன் நாகநாதர் சுவாமி ஆடி பூர விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு ஆடி மாதம் குறிப்பாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளான பார்த்திபனூர், சத்திரக்குடி, கமுதக்குடி, இளையான்குடி, பெரும்பச்சேரி, மானாமதுரை, வளையனேந்தல் போன்ற பகுதிகளில் இருந்து பரமக்குடி வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நயினார் கோயில் கொடிமரத்துக்கு கீழ் விளக்கு ஏற்றி அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். பின் அம்மனுக்கு விஷேச தீபாரதனையும் ஆராதனைகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி