1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மைக்கேல் அதிதூதர் ஆலய கூட்டு திருப்பலி விழா மற்றும் தேர்ப்பவனி வான வேடிக்கைகள் மேள தாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபாடு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 153 ஆம் ஆண்டு திருப்பலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்குத்தந்தை அவர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தொடர்ச்சியாக வான வேடிக்கைகள் முழங்க மிக்கேல் அதிதூதரின் உருவம் தாங்கிய தேர் பவனியை கிராமங்களில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சுமந்து வந்து தேர்பவனி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு கூட்டுத் திருப்பலியில் ஈடுபட்டனர்.